நெல்லை மேயருக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வரும் ஜனவரி 12ஆம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
நெல்லை திமுக மேயர் சரவணனுக்கு எதிராக ஆளும் கட்சி கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கினர். நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேருவை சந்தித்து, மேயர் சரவணன் மீது புகார் மனுக்கள் கொடுத்தனர்.
மேயரை மாற்ற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதினர்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 6ஆம் தேதி மாநகராட்சி ஆணையர் தாக்ரேவிடம் மேயர் சரவணனுக்கு எதிராக 38 திமுக கவுன்சிலர்கள் “நம்பிக்கையில்லாத் தீர்மானம்” கொண்டு வர ஆணையரிடம் மனு அளித்தனர்.
கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று நெல்லை மேயர் சரவணனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அவையில் கொண்டுவர மாநகராட்சி ஆணையர் சுபம் தாக்கரே நடவடிக்கை எடுத்துள்ளார். வரும் 12ஆம் தேதி இந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
அந்த அறிவிப்பில், “தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998, பிரிவு 51(2)(3)-ன் படி திருநெல்வேலி மாநகராட்சி, மாமன்ற உறுப்பினர்களால் மாமன்றத் தலைவர் மீது அளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்துவதற்கான கூட்டம் 12.01.2024 அன்று காலை 11.00 மணிக்கு திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக ராஜாஜி மண்டப மாமன்றக் கூட்ட அரங்கில் வைத்து நடைபெற உள்ளது.
மேற்படி கூட்டத்தில் தாங்கள் தவறாமல் கலந்து கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகின்றது” என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
சாதி இல்லை எனும் பொய்மை ஒழியட்டும்! நேரடி கள ஆய்வுத் தொடர் – இறுதி பாகம்!
விஜயகாந்தின் இறுதி ஊர்வலம்: ஒலி பெருக்கியில் உருக்கமாக வேண்டுகோள் விடுத்த பிரேமலதா