தனிநபர் வருமான வரி விகிதம் குறித்து இடைக்கால பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
6ஆவது முறையாக இன்று (பிப்ரவரி 1) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். சுமார் 59 நிமிடம் பட்ஜெட் உரையாற்றினார்.
2024 – 25 ஆம் ஆண்டுக்கான இந்த இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரி உச்ச வரம்பு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த பட்ஜெட்டில் வரி விதிப்பு நடைமுறையில் தனிநபரின் ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை வருமான வரி கிடையாது. வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வருமான வரிவிதிப்பில் எந்த மாற்றமும் இல்லை. தற்போதைய வரிவிதிப்பு தொடரும் என்று இடைக்கால பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நேரடி மற்றும் மறைமுக வரி விதிப்பு முறைகளில் எந்த மாற்றமும் இல்லை. 2023-24 க்கான திருத்தப்பட்ட நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.8 சதவிகிதமாக உள்ளது. 2025-26 ஆம் ஆண்டுக்குள் நிதிப் பற்றாக்குறையை 4.5 சதவிகிதத்துக்குள் குறைக்க திட்டம் வகுக்கப்படும்” என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள்!
இடைக்கால பட்ஜெட்: வேளாண் துறைக்கான முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?