பாஜகவுடன் இனி எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்று மக்களிடம் எடுத்து சொல்லுங்கள் என்று அதிமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் 52ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (அக்டோபர் 17) நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்துகொள்ள வருகைத் தந்த எடப்பாடி பழனிசாமிக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
அதிமுக அலுவலகத்தில் இருக்கும் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் எடப்பாடி பழனிசாமி. கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கி 52ஆவது ஆண்டு விழாவை கொண்டாடினார்.
இதைத்தொடர்ந்து மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டின் போது மரணமடைந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு தலா 6 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
பின்னர் பொறுப்பாளர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி,
“மாவட்ட பொறுப்பாளர்கள் தங்களது மாவட்டங்களில் நடைபெறும் பூத் கமிட்டி பணிகளை மேற்பார்வையிட வேண்டும். இந்த பணிகளுக்கு மாவட்ட செயலாளர்கள் ஒத்துழைக்கவில்லை என்றால் நேரடியாக என்னிடம் புகார் தெரிவிக்கலாம். மாவட்ட செயலாளர்களுக்கு பயந்து அவர்கள் சொல்வதை கேட்டு நடக்காமல் பணிகளை தீவிரப்படுத்துங்கள்.
பூத் கமிட்டி அமைப்பதில் எந்த ஒரு பாரபட்சமும் பார்க்காமல் அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்.
இனி பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை மக்களிடம் அழுத்தமாக எடுத்துக்கூறுங்கள்” என்று பொறுப்பாளார்களிடம் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ஒரு பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம்: உச்சநீதிமன்றம் மறுப்பு!
லியோ டிக்கெட்டிற்கு அதிக கட்டணமா? புகார் எண்கள் அறிவிப்பு!
அப்ப கன்பார்ம் டயர் சார்..