நம்பிக்கை வாக்கெடுப்பு : பெரும்பான்மையை நிரூபித்த நிதிஷ் குமார்

அரசியல் இந்தியா

பிகார் சட்டமன்றத்தில் இன்று (பிப்ரவரி 12) நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்றது .

பிகாரில் ஜேடியு-காங்கிரஸ்- ஆர்ஜேடி-இடதுசாரிகள் இணைந்த மகா பந்தன் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது.

இந்த கூட்டணியில் இருந்து சமீபத்தில் விலகி பிகார் முதல்வர் நிதிஷ் குமார், பாஜகவில் இணைந்து 9ஆவது முறையாக முதல்வரானார்.

243 உறுப்பினர்கள் கொண்ட பிகார் சட்டப்பேரவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 128 எம்எல்ஏ.க்களின் ஆதரவு உள்ளது.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் (79), காங்கிரஸ்(19) மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் (16) அடங்கிய கூட்டணிக்கு 114 எம்எல்ஏ.க்களின் ஆதரவு உள்ளது.

இந்தச்சூழலில் நிதிஷ் குமார் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று (பிப்ரவரி 12) சட்டப்பேரவையில் நடைபெற்றது. அப்போது, பிரஹலாத் யாதவ், நீலம் தேவி மற்றும் சேத்தன் ஆனந்த் ஆகிய மூன்று ஆர்.ஜே.டி எம்.எல்.ஏ.க்களும் ஆளும் கட்சி பக்கம் அமர்ந்திருந்தார்கள்.

இதை பார்த்த தேஜஸ்வி யாதவ், நம்பிக்கை வாக்கெடுப்பு முடியும் வரை எம்.எல்.ஏ.க்கள் அவரவர் இடத்தில் அமர வேண்டும். இல்லையென்றால் வாக்குகள் செல்லுபடியாகாது” என கூற, இதற்கு துணைச் சபாநாயகராக இருந்த மகேஷ்வர் ஹசாரி எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

தொடர்ந்து, சபாநாயகருக்கு எதிராக ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு 125 எம்எல்ஏக்கள் ஆதரவும், 112 பேர் எதிர்ப்பும் தெரிவித்தனர்.
இதனால், சபாநாயகர் பதவியிலிருந்து ஆர்ஜேடி மூத்த தலைவர் அவத் பிஹாரி சவுத்ரி நீக்கப்பட்டார்.

இதையடுத்து நிதிஷ்குமார் தலைமையிலான என்,டி.ஏ கூட்டணி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதன்பின் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக- ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அரசு 129 எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றது என துணை சபாநாயர் மகேஷ்வர் ஹசாரி அறிவித்தார்.

122 எடுத்தால் பெரும்பான்மை என்ற நிலையில் கூடுதலாக 7 வாக்குகள் பெற்று நிதிஷ் குமார் வெற்றி பெற்றுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

‘வெயிட்டாக’ களமிறங்கும் லெஜெண்ட் சரவணன்… இயக்குநர் இவர்தான்!

மீண்டும் ராமநாதபுரத்தில் போட்டி: ஐயூஎம்எல் உறுதி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *