மக்கள்தொகை பெருக்கத்திற்கான காரணம் குறித்து பிகார் முதல்வர் நிதிஷ்குமார் பேசிய பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிகாரில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பினை அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் நேற்று தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து இன்று (ஜனவரி 8) வைஷாலி மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் முதல்வர் நிதிஷ்குமார் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அவர் பேசுகையில், “பெண்களுக்கு எப்போது கல்வியறிவு கிடைக்கிறதோ, அப்போதுதான் மக்கள் தொகை எண்ணிக்கை கட்டுபடுத்தப்படும். இல்லையென்றால் இப்போதுள்ள நிலையே நீடிக்கும். பெண்கள் கல்வி கற்றால் அவர்கள் தங்களை எவ்வாறு கர்ப்பமாவதை தடுப்பது எப்படி என்ற விழிப்புணர்வு ஏற்படும்.
அதேவேளையில் ஆண்கள் தங்களது செயலுக்கு பொறுப்பேற்க தயங்குகின்றனர். இதனால் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை” என்று நிதிஷ்குமார் பேசினார்.
இதனையடுத்து மக்கள் தொகை பெருக்கம் குறித்த பேச்சில் பெண்களை இழிவுபடுத்திவிட்டார் என்று முதல்வர் நிதிஷ்குமாரின் கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பிகார் மாநில பாஜக பொதுச்செயலாளர் நிதிஷ் ஆனந்த், தனது ட்விட்டர் பக்கத்தில், நிதிஷ்குமாரின் கருத்தை “பாலியல் கருத்து” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ”பெண்கள் படிக்க வேண்டும் என்றது பரவாயில்லை, ஆனால் ஆண்களை ஏன் இழிவுபடுத்த வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து பாஜக தலைவரும், பிகார் சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சாம்ராட் சவுத்ரி, “முதல்வர் நிதிஷ் குமார் பயன்படுத்திய அநாகரீகமான வார்த்தைகள் உணர்வின்மையின் உச்சம். இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி, முதல்வர் பதவியின் கண்ணியத்தை கெடுக்கிறார்” என்று கூறியுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
வெள்ளை உடை… வெள்ளி நகை… ஊட்டியை ஹீட் ஆக்கிய சாய்பல்லவி
பாஜகவில் பெண் பாதுகாப்பு: காயத்ரிக்கு குஷ்பு பதில்!