“நாளை மாலை 4 மணிக்கு பிகார் முதல்வர் நிதிஷ் குமார், பாஜகவுடன் கூட்டணி வைத்து முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்” என ஜேடி(யு) தேசிய செய்தி தொடர்பாளரும், பொதுச்செயலாளருமான கே.சி. தியாகி தெரிவித்துள்ளார்.
பிகாரில் லாலுபிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது.
இந்நிலையில் லாலு கட்சியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து விலக திட்டமிட்டு, அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவுடன் கூட்டணியமைத்து மீண்டும் நிதிஷ் குமார் பதவி ஏற்க உள்ளார் என தகவல்கள் வருகின்றன.
ஜேடியு எம்எல்ஏக்களுடன் நிதிஷ் குமார் வீட்டில் முக்கிய ஆலோசனை சிறிது நேரத்தில் தொடங்கவுள்ளது. இதற்காக எம்.எல்.ஏ.க்கள் வரத் தொடங்கியுள்ளனர்.
“நாளை காலை 10 மணிக்கு ஆளுநரிடம் தனது ராஜினாமா கடிதத்தை நிதிஷ் சமர்ப்பிப்பார் . ஜேடியு கோர் கமிட்டி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. நாளைய தினம் புதிய முதலமைச்சராக பதவியேற்க ஆளுநரிடம் உரிமை கோரப்படும். 2 துணை முதல்வர்களுடன் நிதிஷ் பதவியேற்பார்” என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
“பிகார் முதல்வராக நிதிஷ்குமார் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் பதவியேற்பார்” என்று ஜேடி(யு) தேசிய செய்தி தொடர்பாளரும், பொதுச்செயலாளரும், நிதிஷ் குமாரின் அரசியல் ஆலோசகருமான கே.சி.தியாகி தெரிவித்துள்ளார்.
இந்தி ஊடகமான அமர் உஜாலாவுக்கு இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு நிமிட பேட்டியில், “ரயில் வலது பக்கம் (பாஜக) திரும்புகிறது” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “என் இயல்பைப் பார், என் நடத்தையைப் பார் என்று சொல்வார்கள். ஒரு பிரச்சனை சிக்கலாகும் போது, அதைத் தீர்க்க முயற்சி செய்ய வேண்டும்” என . ஜேடியு பொதுச் செயலாளர் கே.சி.தியாகி கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
கலெக்டர்களை அழைத்து பாராட்டிய கவர்னர்!
”இருவர் வானம் வேறென்றாலும்” காதலர் குறித்து பிரியா பவானி ஷங்கர் உருக்கம்!