திருவாரூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை பிகார் முதல்வர் நிதிஷ் குமார் திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உடல் நலக் குறைவு காரணமாக நிதிஷ் குமாரின் திருவாரூர் வருகை ரத்து செய்யப்பட்டிருப்பதாக ஆங்கில பத்திரிகையாளர்கள் ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் காட்டூரில் ரூ.12 கோடி செலவில் 7,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்காக பிகார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பிகாரில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காட்டூருக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று (ஜூன் 20) காலையில் பட்டிமன்றம், கருத்தரங்கு என கலைஞர் கோட்ட திறப்பு விழா காட்டூரில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பிகாரில் இருந்து துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும், ஜனதா தள கட்சியை சேர்ந்த அமைச்சர் சஞ்ஜய் ஜாவும் திருவாரூர் கிளம்பியுள்ளனர்.
அதேசமயம் உடல் நலக் குறைவு காரணமாக நிதிஷ் குமார் வரவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரியா
தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!
செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை எப்போது?: அமைச்சர் பதில்!