பாஜக ஆட்சி மன்றக் குழு: கட்கரி நீக்கம்! வானதிக்கு முக்கிய பதவி!

அரசியல்

பாஜகவின் உயர்மட்ட விவகாரங்கள் தொடர்பாக முடிவு எடுக்கும் ஆட்சிமன்றக் குழு எனப்படும் நாடாளுமன்ற குழுவில் இருந்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

பாஜகவின் உயர்மட்ட விவகாரங்கள் தொடர்பாக முடிவு எடுக்க நாடாளுமன்ற குழு உள்ளது. பாஜகவின் உச்சபட்ச அதிகாரம் கொண்டதாக கருதப்படும் இந்த குழு எடுக்கும் முடிவின் அடிப்படையில் தான் மாநில முதல்வர்கள், மாநில தலைவர்கள் உள்ளிட்ட பிற முக்கிய பதவிகள் போன்றவை நியமனம் செய்யபடுகின்றன.

இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, புதிய நாடாளுமன்ற குழுவின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

இதில் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி மற்றும் மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற குழுவில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

அவர்களோடு, கர்நாடக முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பா, மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி இக்பால் சிங் லால்புரா, மக்களவை முன்னாள் எம்பி சத்யநாராயண் ஜாதியா, பாஜக தேசிய ஓபிசி மோர்ச்சா தலைவர் கே.லட்சுமணன், தேசிய செயலாளர் சுதா யாதவ் ஆகியோர் கட்சியின் நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

நாடாளுமன்ற குழுவில் முதல் சீக்கியர்!

இந்த குழுவில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் சீக்கியரான இக்பால் சிங் லால்புரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளது கட்சியினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதன் முலம் பாஜகவின் நாடாளுமன்றக் குழுவில் சேர்க்கப்பட்ட முதல் சீக்கியர் என்ற பெருமையை லால்புரா பெற்றுள்ளார்.

மத்திய தேர்தல் கமிட்டியில் வானதி சீனிவாசன்!

இதற்கிடையில், மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், பாஜக தேசிய பொதுச் செயலாளர் பூபேந்தர் யாதவ், ஓம் மாத்தூர் மற்றும் அதன் மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி (சிஇசி) உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஷாநவாஸ் உசேன் மற்றும் ஜுவல் ஓரான் நீக்கப்பட்டுள்ளனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

குடியரசு துணைத் தலைவரை சந்தித்தார் முதல்வர்!

+1
0
+1
1
+1
0
+1
4
+1
1
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *