மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இந்த ஆண்டின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் நேற்று துவங்கியது. பின்னர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார்.
அதில், 2023-24 ஆம் ஆண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சியானது 6 – 6.8 சதவிகிதமாக இருக்கும் என்றும் இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இன்று காலை 11 மணியளவில் மக்களவையில் 2023-24 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் ஐந்தாவது பட்ஜெட் இதுவாகும். காகிதமில்லா டிஜிட்டல் முறையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த பட்ஜெட்டில் மிக முக்கியமான அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படலாம். விவசாயிகளுக்கு கடன்கள் வழங்கப்படலாம். பெண்கள் மற்றும் இளைஞர்களுக்காக சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்படலாம். புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் கூட்டத்தொடரானது இரண்டு அமர்வுகளாக நடைபெற உள்ளது. முதல் அமர்வு ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டாம் அமர்வானது மார்ச் 13 முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
செல்வம்
டாஸ்மாக் வழக்கு: வருமான வரித்துறை விளக்கமளிக்க உத்தரவு!
வேலுமணி வழக்கில் வருமான வரித்துறைக்கு நோட்டீஸ்