சர்வதேச நிதி ஆணையத்தின் (ஐ.எம்.எப். ) ஆண்டுக்கூட்டம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டம் அமெரிக்காவில் அக்டோபர் 16 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதையடுத்து ஜி 20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டம் நடக்கிறது.
இந்நிலையில், இந்தக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (அக்டோபர் 11 ) அமெரிக்கா செல்கிறார் என நிதி அமைச்சகம் இன்று (அக்டோபர் 10 ) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும், அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் ஏலனுடனும், சர்வதேச நிதி ஆணையத்தின் தலைவரான டேவிட் மால்பாஸ் ஆகியோரை தனித்தனியே சந்தித்துப் பேச உள்ளார்.
மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரை நிகழ்த்தவிருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
போலி ட்விட்டர் கணக்கு: கவிஞர் தாமரைக்கு வந்த சோதனை!
தீபாவளிக்கு பின் இயக்கப்படும் பேருந்துகள்!