மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னை பிரதமராக நினைத்து கொள்கிறார் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். nirmala sitharaman thought herself as pm
தமிழ்நாட்டின் மழை வெள்ள பாதிப்பை இயற்கை பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும், ரூ.21 ஆயிரம் கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும், 2024 நாடாளுமன்ற பொது தேர்தலில் மீண்டும் வாக்குச் சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்,
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று (ஜனவரி 4) நடைபெற்றது.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அப்போது மேடையில் திருமாவளவன் பேசினார்.
அவர், “தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பேரிடர் என அறிவித்து, அதற்கு ரூ.21 ஆயிரம் கோடி நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு பேட்டியில் நிதி தர முடியாது என தெரிவித்து இருக்கிறார். ரூ.21 ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது.
வழக்கமாக தருகிற நிதியை தவிர்த்து, பாதிப்புகளை கணக்கில் கொண்டு கூடுதல் நிதி வழங்க வேண்டும்.
4 மாவட்டங்களில் வெள்ளத்தால் அதிகமாக பாதித்தது தூத்துக்குடி மாவட்டம் தான். காயல்பட்டினம் கூட மிக அதிக பாதிப்பை சந்தித்தது.
ஒரு வார காலம் தண்ணீர் தேங்கி இருந்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார்கள். பாஜக ஆளவில்லை என தமிழ்நாட்டை வஞ்சிப்பது கண்டிக்கதக்கது.
நிர்மலா சீதாராமன் தன்னையே பிரதமர் என்று நினைத்து கொண்டு இருக்கிறார். அவருக்கு அந்த அதிகாரம் யார் கொடுத்தது. தமிழ்நாடு என்றால் அவருக்கு ஏன் இந்த கசப்பு என்று தெரியவில்லை.
மேலும் கோரமண்டல் கம்பெனியை முட வேண்டும் என்ற பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று வரும் 9 தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
தமிழக நிதி – வாங்கியதை விட கொடுத்தது அதிகம் : புள்ளி விவரங்களோடு சொன்ன நிர்மலா சீதாராமன்
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ வாழ்க்கை வரலாறு படம்!
nirmala sitharaman thought herself as pm