2024 – 25-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நாளை (ஜூலை 23) தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 22) மக்களவையில் 2023 – 24-ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார்.
அதில்,
“1960 ஆம் ஆண்டில் உணவுப் பற்றாக்குறையால் உணவுப் பொருளை இறக்குமதி செய்யும் நாடாக இருந்த இந்தியா தற்போது வேளாண் விளை பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடாக உருவெடுத்துள்ளது.
தொழில் துறையின் வளர்ச்சி 9.5 சதவீதமாக உள்ளது. நாட்டின் 47.5 சதவீத மொத்த உற்பத்தி மதிப்பில் பெரும்பாலான மூலப்பொருட்கள் உள்நாட்டிலிருந்தே பயன்படுத்தப்பட்டுள்ளது.
விவசாயம், தொழில், சேவை துறைகளில் அனைத்து உற்பத்தி சார் நடவடிக்கைகளிலும் 50 சதவீதம் உள்நாட்டு பொருட்களே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
சமூக சேவைகளுக்கு செலவிடப்படும் நிதியின் அளவு, 2017-18-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.7 சதவீதமாக இருந்தது. இது 2023-24-ம் நிதியாண்டில் 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.
2014-15-ம் நிதியாண்டில் இருந்ததைவிட, 2024-25-ம் நிதியாண்டில் பெண்களின் நலனுக்கும் அதிகாரமளித்தலுக்கும் மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை 218.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஊரகப் பகுதிகளில், பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தின்கீழ், ஏழைகளுக்காக 2.63 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக வேளாண் துறை ஆண்டுக்கு சராசரியாக 4.18% வளர்ச்சி அடைந்துள்ளது
2018 முதல் 2024 வரையிலான நிதியாண்டில், சமூக நலத்திட்டங்களுக்கான செலவு, ஆண்டின் மொத்த வளர்ச்சி வீதத்தில் 12.8% அளவிற்கு அதிகரித்துள்ளது.
2022-23-ல் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு 37% ஆக அதிகரித்துள்ளது.
உற்பத்தித் துறையில் 35.4% பங்களிப்புடன் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இந்தியாவின் மின் பகிர்மானம், ஒரே அலைவரிசையுடன், மாநிலங்களுக்கிடையே மாற்றம் செய்து கொள்ளத்தக்கவகையில் 1,18,740 மெகாவாட் திறனுடன் ஒரே தொகுப்பாக இணைக்கப்பட்டுள்ளது. இது, உலகிலேயே மிகப்பெரிய மின்தொகுப்பாக உருவெடுத்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சூர்யாவின் கங்குவா : அண்ணன் படத்தில் இணையும் கார்த்தி
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி? செல்வப்பெருந்தகை ரியாக்ஷன்!