நாடாளுமன்றத்தில் 7ஆவது முறையாக மத்திய நிதிநிலை அறிக்கையை நிர்மலா சீதாராமன் இன்று (ஜூன் 23) தாக்கல் செய்து வருகிறார்.
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக கூட்டணி 3வது முறையாக ஆட்சியில் அமர்ந்துள்ள நிலையில், நடந்து வரும் மழைக்கால கூட்டத்தொடரில் இன்று 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
அதனை முன்னிட்டு இன்று காலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது நிதியமைச்சருக்கு ஜனாதிபதி இனிப்பு ஊட்டினார்.
அவருடன் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி, தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன், மத்திய நிதியமைச்சக அதிகாரிகளும் குடியரசுத் தலைவரை சந்தித்தனர்.
பின்னர் நாடாளுமன்ற வளாகத்துக்கு சென்ற நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சரவையில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெற்றார்.
தொடர்ந்து தற்போது நாடாளுமன்றத்தில் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று காலை சரியாக 11 மணிக்கு தாக்கல் செய்ய தொடங்கினார்.
அதில் இந்தியாவின் நிதிநிலை செயல்பாட்டையும், பல்வேறு திட்டங்களையும், அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் அறிவித்து வருகிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பட்ஜெட் தாக்கல் : தங்கம், வெள்ளி விலை அதிரடி சரிவு!
ஆன்லைனில் கட்டிட அனுமதி : விதிமீறினால் சட்டப்படி நடவடிக்கை… கட்டுப்பாடுகள் என்னென்ன?