தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி உயர்த்தப்படும். இதனால் தங்கம், வெள்ளி விலை அதிகரிக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பேசும்போது, “2023-24-ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.9 சதவிகிதமாக இருக்கும்.
அடுத்த 3 ஆண்டுகளில், ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள உதவி பெறுவார்கள். 50 விமான நிலையங்கள் அமைக்கப்படும்.
ஏற்கனவே உள்ள வங்கிகள் சட்டம் மற்றும் ரிசர்வ் வங்கிக்கான சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்படும். பங்குச்சந்தை நடைமுறைகளை அறிந்துகொள்ளும் வகையில் தேசிய கல்வி நிறுவனம் அமைக்கப்படும்.
பழைய வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களை மாற்றுவதற்கு மாநிலங்களுக்கு ஆதரவு அளிக்கப்படும். சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான வருமான வரி உச்சவரம்பு ரூ.2 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயர்த்தப்படும். தொலைக்காட்சி பேனல்களின் அடிப்படை சுங்க வரி 2.5 சதவிகிதமாக குறைக்கப்படும். இதனால் டிவி விலை குறையும்.
சிகரெட்டுகள் மீதான உற்பத்தி வரி 16 சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது. இதனால் சிகரெட் விலை உயரும். மூன்றாம் கட்ட மின்னணு நீதிமன்றங்கள் அமைக்க ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி உயர்த்தப்படும். இதனால் தங்கம், வெள்ளி விலை அதிகரிக்கும்.” என்று தெரிவித்தார்.
செல்வம்
ரூ.7 லட்சம் வரை வருமான வரி கிடையாது: நிர்மலா சீதாராமன்
குடியரசுத் தலைவர் உரை : பாஜக அரசின் தேர்தல் பரப்புரை – விசிக!
இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் அறிவிப்பு!