நிர்மலா சீதாராமன்: ராமநாதபுரம் பயணத்தோடு திடீரென சேர்க்கப்பட்ட தூத்துக்குடி விசிட்- முழு ஷெட்யூல்!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (டிசம்பர் 25) மாலை டெல்லியில் இருந்து தமிழ்நாடு வருகிறார்.
சென்னை வெள்ளம், தென் மாவட்ட வெள்ளம் குறித்து டிசம்பர் 21 ஆம் தேதி டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடத்திய பிரத்யேக செய்தியாளர் சந்திப்பு தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எதிராகவும், நிர்மலாவுக்கு எதிராகவும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
இந்நிலையில், டிசம்பர் 24 ஆம் தேதி பிரதமர் அலுவலகத்தின் தமிழ்நாடு வெள்ள நிலவரம் பற்றிய ஆய்வுக் கூட்டம், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உடனான பிரதமர் மோடியின் தொலைபேசி உரையாடல் ஆகிய முக்கிய டெவலப் மென்ட்டுகளூக்கு பின்னால் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி செல்ல இருக்கிறார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதராமனின் பயணம் முழு விவரம் இதோ…
டிசம்பர் 25
இன்று மாலை 4.15 மணிக்கு டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்படும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாலை 7.10 மணியளவில் சென்னை விமான நிலையம் வருகிறார்.
இன்று இரவு சென்னையில் தங்குகிறார். அப்போது அவரை தமிழ்நாட்டின் முக்கிய பாஜக நிர்வாகிகள் சந்தித்து பேச திட்டமிட்டப்பட்டுள்ளது.
டிசம்பர் 26
சுனாமி தினமான டிசம்பர் 26 ஆம் தேதி காலை 10.15 க்கு சென்னையில் இருந்து விமானத்தில் தூத்துக்குடி புறப்படுகிறார். 12 மணியளவில் தூத்துக்குடியை அடைகிறார்.
12.30 மணி முதல் 1.30 மணி வரை தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளோடு வெள்ள பாதிப்பு பற்றிய சிறப்பு ஆய்வுக் கூட்டத்தை நடத்துகிறார்.
1.30 மணி முதல் 2.30 மணி வரை மதிய உணவு நேரம்.
2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை தூத்துக்குடி மாவட்டத்தால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிடுகிறார்.
அன்று மாலை 5.45 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக ராமநாதபுரம் செல்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
அன்று இரவு ராமநாதபுரத்தில் தங்குகிறார் நிதியமைச்சர்.
டிசம்பர் 27
மத்திய அரசின் சாதனைகளை கிராமங்கள் தோறும் கொண்டு செல்லும் பிரச்சார இயக்கமான விக்சிட் சங்கல்ப யாத்ரா அக்டோபர் முதல் நடந்துகொண்டிருக்கிறது.
இதில் டிசம்பர் 27 பகல் 12 மணிக்கு ராமநாதபுரத்தில் மாவட்ட கலெக்டருடன் கலந்துகொள்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
டிசம்பர் 27 பிற்பகல் ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டு மாலை மதுரை செல்கிறார்.
டிசம்பர் 27 மதுரையில் தங்குகிறார்.
டிசம்பர் 28
பகல் மதுரையில் இருந்து விமானம் மூலம் ;புறப்பட்டு டெல்லி செல்கிறார்.
இதுதான் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் தமிழ்நாடு விசிட் பற்றிய விவரங்கள்.
டிசம்பர் 27 ஆம் தேதி மத்திய அரசின் சாதனை விளக்க பிரசாரப் பயணத்துக்காக நிர்மலா சீதாராமன் ராமநாதபுரம் வருவது ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியாகும்.
இடையில் தூத்துக்குடி வெள்ளம் ஏற்பட்டதால் இப்போது தூத்துக்குடியை தவிர்த்துவிட்டு ராமநாதபுரத்துக்கு வந்து சென்றால் அது அரசியல் ரீதியாக அடுத்த சர்ச்சையை கிளப்பக் கூடும் என்பதால்… அந்த பயணத்தில் தூத்துக்குடி விசிட் திடீரென சேர்க்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் டெல்லி வட்டாரங்களில்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-வேந்தன்
வேலைவாய்ப்பு : CECRI நிறுவனத்தில் பணி!
பாதிக்கப்பட்ட மக்களுக்கு 40 லட்சம் குளோரின் மாத்திரைகள்!