மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-2025-ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று (பிப்ரவரி 1) காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார்.
இந்த ஆண்டின் முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் நேற்று தொடங்கியது.
கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் பேசுகையில், “உலக அளவில் இந்தியா வளர்ச்சியடைந்து வருகிறது.கடந்த ஆண்டுகளில், உலகம் இரண்டு பெரிய போர்களைக் கண்டது மற்றும் கொரோனா போன்ற ஒரு தொற்றுநோயை எதிர்கொண்டது.
இதுபோன்ற உலகளாவிய நெருக்கடிகள் இருந்தபோதிலும், நமது அரசு பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருந்தது. மேலும், இந்தியர்களின் கடன் சுமையை அதிகரிக்க விடவில்லை” என்று தெரிவித்தார்.
இந்தநிலையில், 6-வது முறையாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்த பட்ஜெட்டில் வருமான வரி செலுத்துவோருக்கு சலுகைகள், வரிக்குறைப்புகள், புதிய வேலைவாய்ப்புகள், உள்கட்டமைப்பு முதலீடுகள் உள்பட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
அதேபோல, பாதுகாப்பு, விண்வெளி, விவசாயம், மருத்துவம், கல்வி, ரயில்வே, பெட்ரோல், டீசல் மீதான வரிக்குறைப்பு போன்ற பல்வேறு அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசு 2024-2025-ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹேமந்த் சோரன் கைது: இந்தியா கூட்டணி தலைவர்கள் அவசர ஆலோசனை!
ஜனவரி மாத ஜி.எஸ்.டி. வசூல் எவ்வளவு?