சென்னையில் புதிதாக கட்டப்படும் வைகை வளாகம் இனி கட்டப் போகும் கட்டிடங்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
சென்னையில் சுங்கத்துறை அலுவலக வளாகத்தில் ரூ. 92 கோடி மதிப்பீட்டில் 9 மாடிகளைக் கொண்ட புதிய அலுவலக கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
வைகை என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வளாகமானது இரண்டு அடித்தளங்கள், ஒன்பது தளங்கள் என்று பிரம்மாண்டமாகக் கட்டியெழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வளாகத்தில் ஏற்றுமதி, இறக்குமதியை நெறிப்படுத்துவதில் பங்கேற்கும் அரசாங்க அமைப்புகளின் அலுவலகங்கள் அமைய இருக்கின்றன.
91.64 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாக உள்ள இவ்வளாகம் 2024-ல் கட்டி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைகை வளாக கட்டுமான பூமி பூஜையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய நிர்மலா சீதாராமன், “இம்முன்னெடுப்பு, சென்னை சுங்க மண்டலத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதில் ஓர் மைல்கல்லாகும்.
இதன்மூலம், தொழில், வர்த்தகத்துறையினருக்கான வசதிகளை அதிகரித்தல், வரி வருவாயை பெருக்குதல் சாத்தியப்படும்.
இது பல்வேறு துறைகளை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்து, தொழிற்துறைக்கான வசதிகளை மேலும் சீர்மைப்படுத்தும். மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத்துறை வாரியத்தின் SWIFT திட்டத்திற்குப் பக்கபலமாக அமையும்.
இந்த வளாகம் ஏற்றுமதி, இறக்குமதியை விரைவு படுத்தலுக்கான வசதிகளை ஒரே இடத்தில் பெறுவதற்காகத் தனித்துவமிக்க முயற்சியாகும். வர்த்தக முன்னேற்றத்தை இந்தியா அடைவதற்கு சுங்க துறையின் பணி முக்கியமானது.
சுங்கத்துறை அலுவலர்கள், பணியாளர்களுக்கு சரியான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். வைகை வளாகம் சுங்க அதிகாரிகளின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும். நவீன வடிவமைப்புடன், புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டப்பட உள்ளது.
பெண்கள், குழந்தைகள் எளிமையாக பயன்படுத்தும் வகையில் புதிய கட்டடம் வடிவமைக்கப்படும். தமிழகத்தில் முன் யோசனையுடன் இது போன்ற அலுவலக கட்டிடம் கட்டப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
அனைத்து அரசு அலுவலகங்களும் சுத்தமாக இருக்க வேண்டும் என பிரதமர் உதரவிட்டுள்ளார். அனைத்து தரப்பு மக்கள் அதிகாரிகள் பயன்படுத்தும் வகையில் கட்டடம் அமையும். பிரிட்டிஷ் காலத்தில் இருந்து சுங்க கட்டிடமாக சென்னை அலுவலகம் இருந்தது.
இந்தியாவில் மிகவும் பழமையான சுங்க கட்டிடமாக இருந்த நிலையில் தற்போது மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது அதிக அளவு மின்சாரம் பயன்படுத்தாமல் காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு கட்டப்படும் முயற்சி நல்ல முயற்சி” என்று கூறினார்.
கலை.ரா
“விவசாயத்தையே நம்பி இருக்க முடியாது” – ஆ.ராசா பேச்சு!
ராகுல் காந்தியின் அழைப்பு: கமல்ஹாசனின் முடிவு!