நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரத்தில் ‘ஏபிசி’கூட தெரியாது என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளது, பாஜக-வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து சுப்ரமணியன் சுவாமி தன் கருத்துகளை கூறுவது புதிதல்ல… 2024-25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்தது தொடர்பான பதிவு ஒன்றில்,
‘நிதியமைச்சர் (நிர்மலா சீதாராமன்) மீது குற்றம் சாட்டுவது கடினம். ஏனென்றால் பட்ஜெட் பிரதமர் அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்டது, ஆனால், முட்டாள்கள் அதை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கையொப்பத்திற்காக அனுப்பினர். அவர் ஜேஎம்யூ முன்னாள் மாணவி, அவருக்கு பாடவும் ஆடவும் மட்டுமே தெரியும்’ என்று கூறியிருந்தார்.
இதற்கு பாஜகவினர் அவரது பதிவிலேயே கடும் பதிலடி கொடுத்தனர். ‘தோல்வி அடைந்த சுப்ரமணியன் சுவாமி நிதியமைச்சராக முயற்சி செய்தார். ஆனால் அது கிடைக்கவில்லை. எனவே இப்போது வெறுத்துப்போன சுப்ரமணியன் சுவாமி பெண் வெறுப்பு ட்வீட்களை பதிவிடுகிறார் என்று நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று (ஜனவரி 27) சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துகொண்ட சுப்ரமணியன் சுவாமி, “பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாட்டின் வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது. மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இருந்தது.
பொருளாதாரத்தில் நாம் இன்னும் சமநிலையற்றவர்களாகவே இருக்கிறோம். பல துறைகளில் நாம் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது. பொருளாதாரம், ராணுவ பாதுகாப்பு போன்றவற்றுக்கு வெளிநாடுகளை சார்ந்து இருக்க வேண்டியுள்ளது.
இந்தியா விஸ்வகுருவாக விரும்பினால், வருமான வரியை ஒழிப்பதில் இருந்து தொடங்க வேண்டும். வருமான வரிகளால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மொழி, சாதி எனப் பல்வேறு வகைகளில் நாம் பிளவுபட்டுள்ளோம். இதனைச் சரி செய்தால் மட்டுமே விஸ்வகுரு ஆக முடியும்.
நமது வெளியுறவுக் கொள்கை சீர்குலைந்துள்ளது. வெளியுறவுக் கொள்கைக்காக மோடி தேர்வு செய்த நபர் அலுவலகத்தில் எழுத்தராக இருக்கக் கூட தகுதியற்றவர். நமது வெளியுறவுத் துறை அமைச்சர் மிகப்பெரிய கோமாளி. Nirmala Sitharaman not know even ABC
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரத்தின் ஏபிசிகூட தெரியாது. மோடியை வீட்டுக்கு அனுப்புவதே அடுத்தக்கட்ட வேலை. மோடி பிரபலமானவர் என்று எந்த வகையில் கூறுகிறீர்கள். அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவுக்கான அழைப்பிதழை பெற காத்துக் கொண்டிருந்தார்கள்” என்று பேசியுள்ளது, பாஜக-வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ள.