தேர்தலில் போட்டியிட பணம் இல்லை : நிர்மலா சீதாராமன்

அரசியல் இந்தியா

மக்களவை தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியதாகவும் ஆனால் தன்னிடம் நிதி இல்லை என்பதால் அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் நிர்மலா சீதாராமன் போட்டியிடலாம் என்று பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாவதற்கு முன்னதாக பேச்சுக்கள் அடிபட்டன. குறிப்பாக தூத்துக்குடியில் திமுக எம்.பி. கனிமொழியை எதிர்த்து நிர்மலா சீதாராமன் போட்டியிடலாம் என்றும் சொல்லப்பட்டது.

ஆனால் அவர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.

இது தொடர்பாக  டைம்ஸ் நவ் சம்மிட்  2024 நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீதாராமன்,  “2024 மக்களவைத் தேர்தலில் ஆந்திர பிரதேசம் அல்லது தமிழ்நாட்டில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

இது குறித்து நான் 10 தினங்கள் வரை யோசித்து விட்டு சென்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று தெரிவித்தேன்.  தேர்தலில் போட்டியிடும் அளவிற்கு என்னிடம் பணம் இல்லை.

இது தவிர ஆந்திராவா அல்லது தமிழ்நாடா என்ற பிரச்சினையும் இருக்கிறது. அதனால் என்னால் போட்டியிட முடியாது என்று நான் சொன்னேன். அதை பாஜக தலைமை ஏற்றுக் கொண்டது” என்று தெரிவித்தார்.

அப்போது அவரிடம், நாட்டின் நிதி அமைச்சர் நீங்கள்? உங்களிடம் தேர்தலில் போட்டியிட போதுமான நிதி இல்லையா? என்று கேட்டபோது, எனது சம்பளம், எனது சம்பாத்தியம் மற்றும் எனது சேமிப்பு தான் என்னுடையது. இந்தியாவின் ஒட்டுமொத்த நிதியும் என்னுடையது இல்லை” என்று கூறினார்.

தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் எனது கட்சி வேட்பாளர்களுக்காக வாக்குச் சேகரிக்க செல்வேன்” என்றும் தெரிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன்.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Game Changer : முதல் பாடலே பிரம்மாண்டம்…! ராம் சரண் – கியாரா செம டான்ஸ்..!

சித்தார்த் – அதிதி ராவ் காதல் டூ கல்யாணம்!

+1
0
+1
6
+1
1
+1
1
+1
3
+1
0
+1
0

2 thoughts on “தேர்தலில் போட்டியிட பணம் இல்லை : நிர்மலா சீதாராமன்

  1. அப்ப மோடிஜி, அமித்ஜி இவங்கள்ளாம் பணத்தை வச்சுதான் ஜெயிக்கறாங்கனு சொல்றாங்களா? மக்கள் ஆதரவு முக்கியம் மேடம், அது உங்களுக்கு கிடைக்குமா?

  2. பிஎம்,கேர்ஸ் நிதி, தேர்தல் பத்திரம் மூலம் வந்த பணம் அத்தனையும் கொட்டினாலும் இந்தம்மா நோட்டாவுக்கு கீழதான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *