மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வந்தடைந்தார்.
இன்று (பிப்ரவரி 1) காலை 11 மணியளவில் மக்களவையில் 2023-24 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் ஐந்தாவது பட்ஜெட் இதுவாகும். காகிதமில்லா டிஜிட்டல் முறையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்தநிலையில் இன்று காலை குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார். பின்னர் பட்ஜெட் டேப்லெட்டுடன் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார்.
பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது.
செல்வம்
மெட்ரோ ரயில் திட்டப்பணி 3 மற்றும் 5: ரூ.404.45 கோடிக்கு ஒப்பந்தம்!
கிச்சன் கீர்த்தனா: கிரிஸ்ப்பி நூடுல்ஸ் சாலட்!