பிஎஃப்ஐ அமைப்பை புரட்டியடிக்கும் என்.ஐ.ஏ: பின்னணி இது தான்!

அரசியல்

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை குறிவைத்து நாடு முழுவதும் 11 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர்.

கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், அசாம் ஆகிய மாநிலங்களில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களிலும் நிர்வாகிகளின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

என்.ஐ.ஏ. அமைப்பு நாடு முழுவதும் இவ்வளவு பெரிய அளவில் சோதனைகளை மேற்கொள்வது இது தான் முதன்முறை.

இந்த ரெய்டுக்கு காரணம் என்ன? யாரை குறி வைக்கிறது என்.ஐ.ஏ.? பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சொல்வது என்ன? என்பதை பார்க்கலாம்.

கடந்த 1977-ம் ஆண்டு உத்தரப் பிரதேசம் மாநிலம் அலிகாரில் சிமி என்கிற இயக்கம் தொடங்கப்பட்டது.

இந்த அமைப்பு பல்வேறு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி கடந்த 2001-ம் ஆண்டு மத்திய அரசால் தடை செய்யப்பட்டது. அந்த அமைப்பின் நிர்வாகிகள் பலரும் தடா மற்றும் பொடா சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் 2003-ம் ஆண்டு சிமி இயக்கத்தின் மீதான தடை நீக்கப்பட்டு 2006-ல் மீண்டும் தடை செய்யப்பட்டது.

இப்படி சிமி அமைப்பு மீது அவ்வப்போது தடை விதிக்கப்பட்டும் நீக்கப்பட்டும் வந்த சூழலில் அந்த அமைப்பில் இருந்தவர்கள் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு பெயர்களில் இயக்கங்களாக செயல்பட தொடங்கினர்.

தமிழ்நாட்டில் மனித நீதி பாசறை, கேரளாவில் நேசனல் டெமாக்ரடிக் ஃப்ரண்ட், கர்நாடகாவில் கர்நாடக ஃபோரம் ஆஃப் டிக்னிட்டி என்கிற பெயர்களில் இவர்கள் இயங்கி வந்தனர்.

இந்த இயக்கங்கள் 2006ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எனும் அமைப்பின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டன.

இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலம் முதலே பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் அவ்வப்போது அரசிடம் அறிக்கைகள் அளித்து வருகின்றன.

இந்த நிலையில் தான் வெளிநாடுகளில் இருந்து பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சட்ட விரோதமாக நிதி பெற்றதற்கான ஆதாரமும் சர்வதேச தீவிரவாத அமைப்பான ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததற்கான ஆதரமும் கிடைத்துள்ளதாக என்.ஐ.ஏ. தரப்பில் கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் தான் நாடு முழுவதும் என்.ஐ.ஏ. அமைப்பு இன்று சோதனை மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் ரெய்டு நடத்துவது குறித்து அதிகாலை 3.30 மணிக்குத்தான் மாநில காவல்துறைக்கு என்.ஐ.ஏ. தகவல் கொடுத்துள்ளது.

பின்னர், உடனடியாக களத்தில் இறங்கிய என்.ஐ..ஏ. பாதுகாப்புக்காக சி.ஆர்..பி.எஃப்.ன் படைப்பிரிவான செண்ட்ரல் இண்டஸ்ட்ரி செக்யூரிட்டி ஃபோர்ஸ் அழைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடக்கிறது. சென்னை, திருச்சி, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, கோவை, நெல்லை, தென்காசி மதுரை உள்ளிட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதில் பிஎஃப்ஐ நிர்வாகிகளான கோவை இஸ்மாயில், மதுரை வழக்கறிஞர் யூசுஃப் மற்றும் முகமது காலித், ராமநாதபுரம் வாலிநோக்கத்தைச் சேர்ந்த பரக்கத்துல்லாஹ் ஆகியோரை முக்கியமாக குறிவைத்து இந்த சோதனை நடத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.

இவர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள் தமிழ்நாட்டில் இதுவரை 10 பேரை கைது செய்துள்ளனர்.

அண்டை மாநிலமான கேரளாவில் 22 பேரும் ஆந்திராவில் 5 பேரும் கர்நாடகாவில் 20 பேரும் புதுச்சேரியில் 3 பேர் உள்பட நாடு முழுவதும் 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

என்.ஐ.ஏ.வின் இந்த ரெய்டு மற்றும் பாப்புலர் ஃபிரண்ட் நிர்வாகிகளின் கைதை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அந்த அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறுபான்மை சமூகம் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மேம்பாட்டுக்காக உழைப்பதாக தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பு,

விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்ப்புக் குரல்களை அடக்குவதை வன்மையாகக் கண்டிக்கிறோம் என என்.ஐ.ஏ.வின் சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

அப்துல் ராஃபிக்

ஆபரேஷன் ஆ.ராசா : எல்.முருகன் போடும் நீலகிரி ஸ்கெட்ச்!

வெளியானது துணிவு செகண்ட் லுக்!

+1
0
+1
1
+1
0
+1
4
+1
0
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *