தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக, சென்னை, கோவை, திருச்சி, சிவகங்கை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் இன்று (பிப்ரவரி 2) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.
அதேபோல சிவகங்கை இளையான்குடியில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த விஷ்ணு, தென்காசி மாவட்டத்தில் நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், இளையான்குடி விஷ்ணுபிரசாத், காளப்பட்டி முருகன், கோவை மாவட்டத்தில் முருகன் மற்றும் ரஞ்சித் குமார் ஆகியோர் வீடுகளிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக கிடைக்கப்பெற்ற புகாரின் பேரில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருவது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் நீடித்தால் தென்னிந்தியா தனிநாடாகும்: காங்கிரஸ் எம்.பி
தொடர் இழுபறி: ஜார்கண்ட் முதல்வராக சம்பாய் சோரன் பதவியேற்க ஆளுநர் அழைப்பு!