போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கின் கூட்டாளியான சதா என்ற சதானந்தை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இன்று (மார்ச் 13) கைது செய்துள்ளனர்.
ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த மார்ச் 9-ஆம் தேதி டெல்லியில் கைது செய்தனர்.
இதுகுறித்து என்.சி.பி. வெளியிட்ட அறிக்கையில், “இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் போதைப்பொருள் நெட்வொர்க்கின் தலைவராக மற்றும் மாஸ்டர்மைண்டாக ஜாபர் சாதிக் செயல்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் மூலம் பெரும் தொகையை சம்பாதித்து, திரைப்படம், கட்டுமானம் , ரியல் எஸ்டேட் என பல தொழில்களில் முதலீடு செய்துள்ளார். போதைப்பொருள் கடத்தலுக்கான நிதி ஆதாரங்கள் மற்றும் போதைப்பொருள் வருமானம் மற்றும் அந்த வருமானத்தின் மூலம் பயனடைந்தவர்கள் யார் யார் என அடையாளம் காண விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், ஜாபர் சாதிக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், திருச்சியை சேர்ந்த அவரது கூட்டாளி சதா என்ற சதானந்தை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சென்னையில் இன்று கைது செய்தனர்.
இவர் சென்னை, திருச்சியில் குடோன் வைத்து சத்துமாவில் போதைபொருளை கடத்தியது என்சிபி விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரை டெல்லி அழைத்து சென்று என்சிபி அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் களமிறங்கும் ஜோ பைடன்
அதிகரிக்கும் வெயில்: பறவைகளுக்குத் தண்ணீர் வைக்க மண் கிண்ணம்!