neyveli nlc protest said Anbumani ramadoss

”நானும் டெல்டா காரன் என்று சொல்லும் ஸ்டாலின்”- கொதித்த அன்புமணி

அரசியல்

விவசாயிகளின் தோழன் என்று கூறும் தமிழக அரசு என்.எல்.சி 3-வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்காமல் மெளனம் காக்கிறது என்று பாமக தலைவர் அன்புமணி  கூறியுள்ளார்.

கடலூரில் என்.எல்.சி நிறுவனத்தை கண்டித்து பாமக நடத்திய போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக பாமகவினர் 55 பேரை போலீசார் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்த நிலையில் அவர்களில் 20 பேரை நேற்று நள்ளிரவு போலீசார் திடீரென நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றினார்கள்.

இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (ஆகஸ்ட் 4) நெல்லை வருகை தந்து பாளையங்கோட்டை சிறையில் உள்ள பாமகவினரை சந்தித்து பேசினார்.

அதைத்தொடர்ந்து சிறைக்கு வெளியே அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், “விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய பாமகவினரை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூரில் இருந்த எங்கள் கட்சியினரை இன்று நான் சந்திக்க இருந்தேன். அதை தடுப்பதற்காக அவர்கள் பாளையங்கோட்டை மற்றும் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

எங்கள் போரோட்டத்தில் ஒரு பத்து நிமிடம் பதட்டமான சூழல் இருந்தது. சமூக விரோதிகள் ஊடுறுவி போலீசாரை தாக்கினர். என்.எல்.சி-யில் இனி வேறு யாரும் போராட்டம் நடத்த கூடாது என்பது தான் அவர்களின் நோக்கம்.

ராணுவத்தையே பார்த்த நாங்கள் தமிழக காவல்துறையை கண்டு அஞ்ச மாட்டோம். இந்த விவகாரத்தில் முதல்வர் பதிலளிக்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “64 ஆயிரத்து 750 ஏக்கர் விளை நிலங்களை என்.எல்.சி நிர்வாகத்திற்கு தமிழக அரசு குத்தகைக்கு விட்டிருக்கிறார்கள் என்று மத்திய அமைச்சர் சொல்கிறார்.

இதற்கு தமிழ்நாடு அரசும் உடந்தையாக இருக்கிறது. என்.எல்.சி மூன்றாவது சுரங்கத்திற்கு பணியை தொடங்க தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் அமைச்சர் பதிலளித்துள்ளார். 3-வது சுரங்கம் தொடங்க 26 கிராமங்கள் மற்றும் 12,000 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது.

நானும் டெல்டா காரன் என்று சொல்லும் முதல்வர் இந்த விவகாரத்தில் பதில் என்ன? தமிழ்நாட்டில் புதிய நிலக்கரி சுரங்கம் தொடங்கப்படாது என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் சட்டமன்றத்தில் உறுதி அளித்தார். ஆனால் இன்று முதல்வர் மெளனம் காக்கிறார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களையும் என்.எல்.சி கையகப்படுத்த இருக்கிறது.

விவசாயிகளின் தோழன்  என்று சொல்ல தமிழக அரசுக்கு தகுதி இல்லை. என்.எல்.சி வெளியேற வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். பெரிய வியாபாரிகள் கார்ப்பரேட் முதலாளிகளின் பக்கத்தில் தமிழ்நாடு அரசு இருக்கிறது.

என்.எல்.சி மூன்றாவது சுரங்கத்தை தொடங்க விடமாட்டோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் இதுவரை வாய் திறக்கவில்லை நாங்கள் தேர்தல் அரசியலுக்காக இந்த போராட்டத்தை செய்யவில்லை.

என்.எல்.சி விவகாரத்தில் மத்திய அரசையும் மாநில அரசையும் வன்மையாக கண்டிக்கிறோம். என்.எல்.சி-க்கு எதிரான எங்களது போராட்டம் மத்திய மாநில அரசுகளை எதிர்த்து தான் தமிழக அரசை மட்டும் எதிர்த்து போராடவில்லை மதுவுக்கு எதிராக கனிமொழி அவர்கள் எங்களோடு இணைந்து போராட்டத்திற்கு வர வேண்டும். மதுவுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே போராடிக் கொண்டிருக்கிறது.

2026 இல் எங்களோடு ஒத்த கருத்துடைய கட்சிகளோடு இணைந்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைப்போம் அதற்காக 2024 பாராளுமன்ற தேர்தலில் வியூகம் அமைப்போம்” என்று தெரிவித்தார்.

நெல்லை சரவணன்

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வாஜரா? – தீர்ப்பு ஒத்திவைப்பு!

கரூரில் தொடரும் ED சோதனை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *