பிரதமர் அண்ணாமலை: போகிற போக்கில் சூர்யா சிவா போட்ட போடு!

அரசியல்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வருங்கால பிரதமராவதற்கு திறமை உண்டு என்று திருச்சி சூர்யா சிவா தெரிவித்துள்ளார்,

தமிழக பாஜகவின் ஓபிசி பிரிவு தலைவராகத் திருச்சி சூர்யா இருந்தார். இவரும், பாஜகவின் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் டெய்சி சரணும் பேசிய தொலைபேசி ஆடியோ சமீபத்தில் வெளியானது. அதில் திருச்சி சூர்யா சிவா ஆபாசமாக பேசியிருந்தார்.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து கட்சியிலிருந்து திருச்சி சூர்யா சிவாவை நீக்கினார் அண்ணாமலை. இன்று (டிசம்பர் 6) கட்சியிலிருந்தே விலகுவதாக ட்விட்டரில் அறிவித்தார் சூர்யா சிவா.

இதைத்தொடர்ந்து கட்சித் தலைவர் அண்ணாமலைக்கு சூர்யா சிவா எழுதியுள்ள கடிதத்தில், “நீங்கள் தமிழகத்துக்கு கிடைத்த பொக்கிசம். 2026ல் நீங்கள் நிச்சயம் முதலமைச்சர் ஆவீர்கள். கடந்த சில மாதங்களாக உங்கள் தலைமையின் கீழ் நான் பணியாற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

வருங்கால பிரதமர் வேட்பாளராக நிற்பதற்கும், பிரதமராவதற்கும் உங்களுக்குத் திறமை இருக்கிறது. இந்திய அரசியலில் உங்களின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியாக இருக்கிறது.

எல்.முருகன் மற்றும் கேசவ விநாயகம் தற்போது மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

இனியாவது கட்சியில் உள்ளவர்களை இருவரும் நம்ப முயல வேண்டும். உங்கள் இருவரின் தலையீடு இல்லாமல் இருந்தால் அண்ணாமலையால் அற்புதங்கள் செய்ய முடியும். மக்கள் தலைவருக்கு வழிவிடுங்கள்.

டெய்சி மற்றும் காயத்ரி ரகுராமுடன் உங்களது விளையாட்டை விளையாட வேண்டாம். தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்றால் அண்ணாமலை வழியில் தலையிடாதீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரியா

லட்சுமி யானை கடைசியாக சாப்பிட்டது என்ன?

ஜி20 – எடப்பாடிக்கு அழைப்பு: பன்னீர் எதிர்ப்பு!

+1
1
+1
2
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

1 thought on “பிரதமர் அண்ணாமலை: போகிற போக்கில் சூர்யா சிவா போட்ட போடு!

Leave a Reply

Your email address will not be published.