காங்கிரஸ் தலைவர்: இன்று வாக்கு எண்ணிக்கை!

அரசியல்

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்காக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (அக்டோபர் 19) காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெறவுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி உள்ள நிலையில், புதிய தலைவருக்கான தேர்தல் அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் சோனியா காந்தியின் குடும்பத்தினர் போட்டியிடாத நிலையில், கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் திருவனந்தபுரம் தொகுதி எம்பி சசிதரூர் ஆகியோர் போட்டியிட்டனர்.

மொத்தம் 9,900 நிர்வாகிகள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில் 9,500 பேர் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். இந்த வாக்குகள் இன்று (அக்டோபர் 19) எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, இன்று காலை 10 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றவுடன் வெற்றி பெற்றவரின் பெயர் அறிவிக்கப்படும்.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.

முன்னதாக, மல்லிகார்ஜுன கார்கே, ”இது உட்கட்சி தேர்தல். நட்பு ரீதியாகப் போட்டியிடுகிறோம். சசிதரூர் என்னைத் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். நானும் அவருக்கு வாழ்த்து கூறினேன்” என்றார்.

அதேபோல, சசிதரூர் கூறுகையில், ”காங்கிரஸின் தலையெழுத்தைத் தொண்டர்கள் முடிவு செய்வார்கள். கட்சியில் மாற்றம் தொடங்கி உள்ளது. தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வேன்” என்று தெரிவித்திருந்தார்.

இருப்பினும், சோனியா, ராகுல் காந்தியின் மறைமுக ஆதரவு பெற்றுள்ள கார்கே வெற்றி பெறுவார் என்று கட்சி வட்டாரத்தில் நம்பப்பட்டு வருகிறது.

மோனிஷா

ஆன்லைன்ஆன்லைன் சூதாட்ட மசோதா: சட்டப்பேரவையில் இன்று தாக்கல்!

ஜெ. மரணம்ஜெ. மரணம்: ஆறுமுகசாமி அறிக்கையை அரசியலாக்கிவிட்டனர்-சசிகலா

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *