“கடினமான தேர்வு” : கர்நாடகாவின் அடுத்த முதல்வர் – எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை!

Published On:

| By Kavi

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 135 இடங்களுடன் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றிருக்கிறது. தற்போது கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கர்நாடக காங்கிரஸ் தலைவர்களான டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆதரவாளர்கள் தங்கள் தலைவரைத்தான் முதல்வராக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
பெங்களூருவில் உள்ள டி.கே.சிவகுமாரின் இல்லத்திற்கு வெளியே ஏராளமான ஆதரவாளர்கள் இன்று மாலை திரண்டு , ‘டி.கே.சிவகுமாரை முதல்வராக்க வேண்டும்’ என முழக்கங்களை எழுப்பினர்.
இதனிடையே மாலை 5.30 மணிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என கட்சித் தலைமை அறிவித்தது.
ஆனால் அறிவித்தபடி 5.30 மணிக்கு கூட்டம் தொடங்கவில்லை. உறுப்பினர்கள் பலர் வராததால் தாமதமாக தொடங்கப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெங்களூருவில் உள்ள சங்க்ரி ஹோட்டலில் கூட்டம் நடந்து வருகிறது. இதில் டிகே.சிவக்குமார், சித்தராமையா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். இந்த ஹோட்டலுக்கு வெளியே நின்று சித்தராமையாவின் ஆதரவாளர்களும், டி.கே.சிவக்குமாரின் ஆதரவாளர்களும் கோஷம் எழுப்பி வருகின்றனர்
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை மல்லிகார்ஜுன கார்கே அறிவிப்பார் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராமலிங்கா ரெட்டி தெரிவித்துள்ளார்.


மல்லிகார்ஜுன கார்கேவின் மகனும், சித்தாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவருமான பிரியங்க் கார்கே, அடுத்த முதல்வர் தேர்வு மிகவும் கடினமான தேர்வாக இருக்க போகிறது” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், “அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான அதிகாரம் கார்கேவுக்கு வழங்கப்படுகிறது” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
பிரியா

சிபிஐக்கு புதிய இயக்குநர்: யார் இந்த பிரவீன் சூத்?

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினிடம் ஆன்லைனில் சிக்கிய அமைச்சர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment