போலி செய்திகளைப் பரப்பும் போது ஒரு நல்ல புகைப்படத்தையாவது பரப்புங்கள் என்று கிருத்திகா உதயநிதி கூறியுள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளைக்குச் சொந்தமான வங்கிக் கணக்கிலிருந்த 34 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை அமலாக்கத்துறை முடக்கியது.
பண மோசடிக்கு உள்ளாகி சென்னை குற்றப்பிரிவு மற்றும் அமலாக்கத் துறையிடம் சிக்கியிருக்கும் கல்லல் நிறுவனத்திடம் இருந்து ரூ. 1 கோடி நன்கொடை பெற்றதன் காரணமாக இந்த நடவடிக்கையை அமலாக்கத் துறை எடுத்துள்ளது.
இந்த செய்தி அமலாக்கத் துறை ட்விட்டர் பதிவில் வெளியிடப்பட்டிருந்தது. அதில், M/s Udayanidhi Stalin Foundation என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தசூழலில் உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி அறக்கட்டளை வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. கிருத்திகாவின் புகைப்படத்துடன் பிரேக்கிங் நியூஸ் வெளியானது.
தனது புகைப்படத்துடன் வெளியான செய்தி குறித்து கருத்து தெரிவித்துள்ள கிருத்திகா உதயநிதி, “என்னைப் பற்றிய போலிச் செய்திகளைப் பரப்புபவர்களுக்கு ஒரு வேண்டுகோள்… குறைந்த பட்சம் என்னுடைய ஒரு நல்ல புகைப்படத்தையாவது பயன்படுத்துங்கள்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஸ்மைலி எமோஜியை போட்டு ரீட்விட் செய்துள்ளார்.
பிரியா
மோடியிடம் செங்கோல் வழங்கிய திருவாவடுதுறை ஆதீனம்
உதயநிதி வாங்கிய பணம்: கணக்கை முடக்கிய பின்னணி -அமலாக்கத் துறை ஆக்சன்!