ஆங்கில புத்தாண்டு அன்று பாமக தொண்டர்கள் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸை நேரில் சந்திக்க வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக ஒமிக்ரான் வகையை சேர்ந்த ஜே.என்.1 வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதன்காரணமாக குழந்தைகள், முதியவர்கள் பொதுஇடங்களில் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்தநிலையில், ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸை அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் சந்தித்து வாழ்த்து பெறுவது வழக்கம்.
நாளை புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கொரோனா பரவல் எதிரொலியால் பாமக நிறுவனர் ராமதாஸை நேரில் சந்திக்க தொண்டர்கள் யாரும் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாமக இன்று (டிசம்பர் 31) வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதிய வகை கொரோனா பரவல் காரணமாக, முன்னெச்சரிக்கையுடன் செயல்படும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியிருப்பதால், நாளை ஆங்கிலப் புத்தாண்டையொட்டி வாழ்த்து பெறுவதற்காக, பாமக தலைவர் ராமதாஸை தைலாபுரம் தோட்டத்தில் தொண்டர்கள் நேரில் சந்திப்பதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிறக்கும் ஆங்கில புத்தாண்டு : வாழ்த்தும் அரசியல் தலைவர்கள்!
நெல்லை, தூத்துக்குடி மின்கட்டணம்: கால அவகாசம் நீட்டிப்பு!