பாலாற்றில் தடுப்பணை: அடிக்கல் நாட்டும் ஜெகன்மோகன் ரெட்டி

அரசியல்

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்காக இன்று (பிப்ரவரி.26) ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அடிக்கல் நாட்டுகிறார். இது தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் சிக்பெல்லாபூர் மாவட்டம், நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகும் பாலாறு, கர்நாடகத்தில் 93 கிலோமீட்டரும்,  ஆந்திர மாநிலத்தில் 33 கிலோ மீட்டரும் பாய்ந்து வாணியம்பாடி அருகே புல்லூர் என்ற இடத்தில் தமிழகத்துக்குள் நுழைகிறது.

தமிழகத்தில்தான் அதிக அளவாக 222 கி.மீ. தூரம் பயணித்து காஞ்சிபுரம் மாவட்டம், வயலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மீறி ஏற்கெனவே கர்நாடகத்தில் பாலாற்றின் குறுக்கே முன்று  தடுப்பணைகளும், ஆந்திர மாநிலத்தில் சிறியதும், பெரியதுமாக 22 தடுப்பணைகளும்  கட்டப்பட்டதால் தமிழகத்தில் பாலாறு வறண்டு கிடக்கிறது.

இந்த நிலையில், பாலாற்றின் குறுக்கே 23-வது தடுப்பணை கட்டுவதற்காக இன்று (பிப்ரவரி.26) ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அடிக்கல் நாட்டுகிறார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ள ஆந்திர மாநில சுற்றுச்சூழல் மற்றும் கனிம வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரா ரெட்டி, “பாலாறு அணை தொடர்பான தமிழ்நாடு அரசின் வழக்கில் பிரச்னை தீர்ந்தது. இன்று ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அடிக்கல் நாட்டுகிறார். தேர்தலுக்குப் பின் பாலாற்றில் மேலும் இரண்டு தடுப்பணைகள் கட்டப்படும்” என அவர் தெரிவித்தார்.

ஆந்திர மாநிலம் பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே 22 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளதால் வட மாவட்டங்களில் பாயும் பாலாறு தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது.

இந்த நிலையில், மேலும் ஒரு தடுப்பணையை கட்டுவதற்காக ஆந்திர அரசு அடிக்கல் நாட்டுவது தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“பாலாற்றுப் படுகையில் ஆந்திரா தொடர்ந்து தடுப்பணைகளைக் கட்டுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் இனியாவது விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அ.இ.அ.தி.மு.க தேர்தல் முழக்கமும், அரசியல் குழப்பமும்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா : கறுப்பு உளுந்து உருண்டை

அப்போ எதுக்கு மலைய விட்டு போனாரு : அப்டேட் குமாரு

+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *