பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறைகள் கட்ட ரூ.1500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
2023-24-ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார்.
முக்கிய அறிவிப்புகள்:
பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
எல்லை பாதுகாப்பில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் கருணைத்தொகை ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறைகள் கட்ட ரூ.1500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச தரத்திலான உலகளாவிய விளையாடு மையம் சென்னையில் அமைக்கப்படும்.
சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் 1000 படுக்கை வசதிகள் கொண்ட கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்த ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வரும்.
செல்வம்
”ஐபிஎல் 2023 தோனிக்கு கடைசி போட்டி கிடையாது”: ஷேன் வாட்சன்
இலங்கை தமிழர்களுக்கு வீடு: ரூ.233 கோடி ஒதுக்கீடு!