விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக அமைச்சர் செஞ்சி மஸ்தான் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக செஞ்சி மஸ்தான் உள்ளார்.
இந்த நிலையில் திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்த அவரை அப்பொறுப்பில் இருந்து கடந்த வாரம் திமுக தலைமை விடுவித்தது.
அவருக்கு பதிலாக புதிய மாவட்ட பொறுப்பாளராக டாக்டர் ப. சேகர் நியமனம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
திடீரென அமைச்சர் செஞ்சி மஸ்தானின் கட்சி பதவி பறிக்கப்பட்டதும், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக அமைச்சர் பொன்முடியின் மகனான கௌதம சிகாமணி தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதும் திமுக வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் விவாதத்தை எழுப்பியது.
இந்த நிலையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (ஜூன் 18) அறிவித்துள்ளார்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத் தலைவராக இருந்த சேகர் மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால் அப்பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டது.
அத்தேர்தலில் செஞ்சி மஸ்தான் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், வடக்கு மாவட்ட அவைத் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
T20WorldCup : லீக் சுற்றுடன் வெளியேறிய பாகிஸ்தான்… பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் விளாசல்!
சென்னையில் ‘மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி’: டெண்டர் கோரிய சிஎம்டிஏ!