எடப்பாடிக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் புதிய மனு!

அரசியல்

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கக் கூடாது என டெல்லி உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வரும் மே 10ஆம் தேதி நடைபெறும் கர்நாடக தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக சார்பில் அன்பரசன் போட்டியிடுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்ரல் 19) அறிவித்தார்.

இதனால் அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு உள்ளிட்ட ஜூலை 11ஆம் தேதி தீர்மானங்களை அங்கீகரித்து இன்றே முடிவை அறிவிக்க வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் எடப்பாடி பழனிசாமி தரப்பு மீண்டும் இன்று முறையிட்டுள்ளது.


ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து இன்று ஆலோசிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிமுக கட்சி விதிகளை மாற்றியதை உடனடியாக ஆணையம் ஏற்க வேண்டும் எனக் கர்நாடகா தேர்தலில் போட்டியிடுவதைச் சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதனால் தேர்தல் ஆணையம் விரைவில் முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிசாமி ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “எடப்பாடி பழனிசாமியைப் பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது. அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இவ்வழக்கில் இறுதி உத்தரவு வரும் வரை அதிமுக விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
பிரியா

நாடாளுமன்ற தேர்தலுக்காகத் தான் இந்த தீர்மானம்: வானதி சீனிவாசன்

டாப் 2 அணிகளான ராஜஸ்தான்- லக்னோ இன்று பலப்பரீட்சை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0