தஞ்சை சேலத்துக்கு புதிய அமைச்சர்கள் ?

Published On:

| By Kavi

திமுக அமைச்சரவையில் தஞ்சை சேலம் மாவட்டங்களிலிருந்து ஒரு அமைச்சர் கூட இல்லை.

எப்பவாது வாய்ப்பு கிட்டும் என்ற நம்பிக்கையிலிருந்த அம்மாவட்ட எம்எல்ஏக்களுக்கு உதயநிதி அமைச்சராகும் செய்தி பெரிய நம்பிக்கையை அளித்தது.

டிஆர்பி ராஜா


தஞ்சை மாவட்டத்தின் சார்பாக என்னை அமைச்சராக்க வேண்டும் என மன்னார்குடி டிஆர்பி ராஜா முதல்வர் குடும்பத்திடம் அழுத்தம் தர ஆரம்பித்தார்.

திருவாரூர் கலைவாணன்


இதை அறிந்த திருவாரூர் கலைவாணன் கட்சிக்காக என் அண்ணனையே இழந்திருக்கிறேன் எனக்குத்தான் அமைச்சர் பதவி தரவேண்டும் என நெருக்க ஆரம்பித்தார்.

துரை சந்திரசேகர்


தொடர்ந்து 5முறை எம்எல்ஏவாக கட்சியை மாவட்டத்தில் உயிர்த்துடிப்போடு வைத்திருக்கும் என்னை மறக்கலாமா என துரை சந்திரசேகர் உரிமைக்குரல் எழுப்ப ஸ்டாலினுக்குக் குழப்பம்.

மூவரில் யாராவது ஒருவருக்குக் கொடுத்தாலும் தேவையில்லாத பிரச்சனை எழும் என சொன்னவர் முடிவைத் தள்ளிப்போட்டுள்ளாராம்.

ராஜேந்திரன்

சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு திமுக எம்எல்ஏவான ராஜேந்திரன் முழு நம்பிக்கையுடன் உள்ளார். முதல்வர் குடும்பமோ உதயநிதியோடு வேறு யாரையும் அமைச்சராக்க விரும்பவில்லை என்கின்றார்கள்.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

ராஜேந்திர பாலாஜியுடன் சமரசம்: வழக்குகள் வாபஸ்!