தொடர் வெள்ளம்: மோடியை நாளை சந்திக்கிறார் ஸ்டாலின்

அரசியல்

வெள்ள நிவாரண பாதிப்பு குறித்து பிரதமர் மோடியுடன் நாளை (டிசம்பர் 18) ஆலோசனை நடத்துவதற்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள இந்தியா கூட்டணியின் 4வது கூட்டம் தலைநகர் டெல்லியில் நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் விமானம் மூலம் தற்போது டெல்லி சென்றடைந்தார். அங்கு அவருக்கு திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதிமாறன், திருச்சி சிவா உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முன்னதாக டெல்லியில் நாளை பிரதமரை சந்திக்க ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அதனை ஏற்று நாளை பகல் 12 மணிக்கு மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது, டிசம்பர் முதல் வாரத்தில் தாக்கிய மிக்ஜாம் புயல், தென்மாவட்டங்களில் தற்போது கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்தும், மக்களுக்கு வழங்கவேண்டிய நிவாரணப் பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

நாமினேஷனில் வந்த டைட்டில் வின்னர்… வீட்டை விட்டு வெளியேறப்போவது யார்?

வெள்ளத்தில் மூழ்கிய வீடு… மூச்சுத்திணறி பலியான தந்தை: கதறும் மகள்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Comments are closed.