நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் இன்று (மார்ச் 25) அறிவிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கான 7 வேட்பாளர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளனர். நெல்லை, மயிலாடுதுறை வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தது.
நெல்லை தொகுதியை தனது மகனுக்கு ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்ததால், வேட்பாளர் தேர்வில் இழுபறி நீடித்தது.
இந்தநிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று நெல்லை, கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில், நெல்லை தொகுதி வேட்பாளராக ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல, விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளராக தாரகை கத்பர்ட் அறிவிக்கப்பட்டுள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேட்புமனு தாக்கல்… சேகர்பாபு – ஜெயக்குமார் இடையே வாக்குவாதம்: என்ன நடந்தது?
அரை மணி நேரத்தில் 50% சார்ஜ்…. என்ன மாடலா இருக்கும்?