அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது, பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகிய முடிவை வரவேற்றும், தமிழக சிறைகளில் உள்ள நீண்டநாள் இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி, சட்டமன்ற கூட்டத்தொடரில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்ததற்கு நெல்லை முபாரக் நன்றி தெரிவித்தார்.
என்டிஏ கூட்டணியிலிருந்து அதிமுக விலகியதை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிமுன் அன்சாரி, “பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகியது தமிழகத்திற்கு நல்ல செய்தி. துணிச்சலாக முடிவெடுத்து பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியதற்கு எடப்பாடி பழனிசாமியிடம் பாராட்டு தெரிவித்தேன். 20 ஆண்டுகளை கடந்த ஆயுள் சிறைவாசிகளை சாதி, மத பேதம் கடந்து விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வலியுறுத்தினோம்” என்று தெரிவித்தார்.
என்டிஏ கூட்டணியிலிருந்து அதிமுக விலகியதை தொடர்ந்து அடுத்தடுத்து இஸ்லாமிய கட்சி தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வருவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
டிரெண்டிங்கில் “அனிமல்” ஃபர்ஸ்ட் சிங்கிள்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!