பாஜகவில் இணைந்த நெல்லை முன்னாள் மேயர்!

Published On:

| By christopher

நெல்லையின் முன்னாள் மேயர் புவனேஸ்வரி திமுகவில் இருந்து விலகி அண்ணாமலை முன்னிலையில் இன்று (ஆகஸ்ட் 19) பாஜகவில் இணைந்துள்ளார்.

அதிமுகவில் இருந்த புவனேஸ்வரிக்கு கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் மேயராகும் வாய்ப்பை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

அதன்படி தேர்தலில் வெற்றிபெற்று இரண்டு ஆண்டுகள் நெல்லை மேயராக அவர் பதவி வகித்தார்.  எனினும் ஜெயலலிதா இறப்புக்கு பின்னர் அதிமுக கட்சி நிகழ்வுகளில் இருந்து விலகி இருந்தார்.

பின்னர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் புவனேஸ்வரி கடந்த 2021 ஆம் ஆண்டு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

அப்போது, “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரையிலும் அ.தி.மு.க-வில் சாதாரணத் தொண்டர்களுக்கு மதிப்பும் மரியாதையும் இருந்துச்சு. அ.தி.மு.க-வில் பெண்களுக்குத் துளியும் மரியாதை கிடையாது. அதனால்தான் மகளிரணி நிர்வாகிகள் பலரும் கட்சியிலிருந்து வெளியேறினர்” என்று தெரிவித்தார்.

எனினும்‌, திமுகவில்‌ இணைந்த அவருக்கு உரிய முக்கியத்துவம்‌ கிடைக்கவில்லை என தெரிகிறது,

இந்த நிலையில், இன்று நெல்லையில் நடைபயணம் மேற்கொண்டுள்ள அண்ணாமலை முன்னிலையில் திமுகவிலிருந்து விலகி அவர் பாஜகவில் இணைந்துள்ளார்.

2021ல் அதிமுகவில் இருந்து திமுகவுக்கும், 2023ல் திமுகவில் இருந்து பாஜகவுக்கும் என 3 ஆண்டுகளில் 3 கட்சிகள் மாறியுள்ளார் முன்னாள் மேயர் புவனேஸ்வரி.

கிறிஸ்டோபர் ஜெமா

உயிர்களை காவு வாங்கிய கொசு விரட்டி?: 3 சிறுமிகள் உட்பட நால்வர் பலி!

அதிமுக மாநாடு: தீவிர ஏற்பாடு!

அலைச்சறுக்கு: இறுதிச்சுற்றில் ஸ்வீடன் வீரர்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share