உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரிய உறுப்பினர்களாக இருக்கக்கூடிய 10,583 பேருக்கு 5 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் மிதிவண்டிகளை வழங்கினார் முதலமைச்சர்.
தமிழ்நாடு உப்பு விற்பனையாளர் சங்கத்தின் சார்பில் நெய்தல் என்ற உப்பு சந்தையில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதனை சென்னையில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். அதேபோல் உப்பு உற்பத்தி இல்லாத காலகட்டமான அக்டோபர், டிசம்பர் மாதங்களில் உப்பளத் தொழிலாளர்களுக்கு ரூ.5,000 நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரிய உறுப்பினர்களாக இருக்கக்கூடிய 10,583 பேருக்கு 5 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் மிதிவண்டிகளை வழங்கினார். மேலும் தமிழ்நாடு ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொண்ட 1649 பயனாளிகளுக்கு 4 கோடியே 56 லட்சம் ரூபாய் மானியத் தொகையையும் அவர் வழங்கினார்.
கலை.ரா