நீட் உண்ணாவிரதத்தின் போது அரியலூர் மாணவி அனிதாவின் குரலைக் கேட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண் கலங்கினார்.
நீட் தேர்வு காரணமாக அரியலூர் அனிதா தொடங்கி சென்னை ஜெகதீசன்வரை 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர்.
எனினும் நீட் விலக்கு மசோதாவுக்கு அனுமதி அளிக்கமாட்டேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறி வருகிறார்.
இந்நிலையில், ஆளுநரைக் கண்டித்தும், நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தமிழ்நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 20) திமுக உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
உண்ணாவிரதத்தின் தொடக்கமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் புகைப்படங்களுக்கு மரியாதை செலுத்தினர்.
அதன் பிறகு உண்ணாவிரதத்தில் அமர்ந்தபோது, அரியலூர் மாணவி அனிதா பேசிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதில் `நான் 1176 மார்க் எடுத்துள்ளேன். கணிதத்திலும், இயற்பியலிலும் 200க்கு 200 மதிப்பெண் எடுத்துள்ளேன். இந்த சமுதாயத்துக்காக நான் மருத்துவராக பணியாற்ற விரும்புகிறேன்` என்று அனிதா கூறியுள்ளார்.
கண்டிப்பாக நான் மருத்துவர் ஆகிவிடுவேன் என்று நீட் தேர்வுக்கு முன்னதாக அனிதா சொன்னதாகவும், ஆனால் நீட் தேர்வு வந்த பிறகு நான் நீட் தேர்வு சரியாக எழுதவில்லை. என்னால் மருத்துவராக முடியாது என்று அனிதா வேதனைப்பட்டதாகவும் அவரது அண்ணன் அந்த வீடியோவில் கூறிகிறார்.
இதை கேட்டதும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனமுடைந்து கண்கலங்கினார். இந்த உருக்கமான் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரியா
“திமுகவை ஆட்சியிலிருந்து வெளியேற்றுவது தான் மாநாட்டின் நோக்கம்” – பா.வளர்மதி
இண்டர் மியாமிக்கு முதல் கோப்பை… மெஸ்ஸியை கொண்டாடும் அமெரிக்கா!