நீட் வினாத்தாள் லீக் விவகாரத்தில் அரசு யாரையும் காப்பாற்றாது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். நாடு முழுவதும் கடந்த மே 5 ஆம் தேதி நடந்த நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர்.
நீட் தொடர்பாக நாளை விவாதம் நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதினார்
இந்நிலையில் இன்று (ஜூலை 2) மக்களவையில் பேசிய மோடி, “குற்றவாளிகளைக் கைது செய்ய அரசாங்கம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருவதாகவும், இந்த நீட் வினாத்தாள் கசிவு பின்னணியில் இருப்பவர்களை அரசு காப்பாற்றாது.
இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்களை விட்டுவைக்க முடியாது. நாடு முழுவதும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வினாத்தாள் கசிவு போன்ற சம்பவங்களைத் தடுப்பதில் அரசு மிகவும் தீவிரமாக உள்ளது என்பதை நாட்டின் ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும், இளைஞர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வினாத்தாள் கசிவைத் தடுக்கும் வகையில் புதிதாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது. நுழைவுத் தேர்வு முறைகேடுகள் மீது மத்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்கும்” என உறுதியளித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
“எல்லாம் அரசியல் ஆதாயத்துக்காக” : ராகுல் உதயநிதி பெயரை குறிப்பிடாமல் விமர்சித்த மோடி