மேகாலயா மாநிலத்தில் 10 மணி நேர நிலவரப்படி ஆளும் தேசிய மக்கள் கட்சி 20 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
மேகாலயா மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளில் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. சோஹிலாங் தொகுதி ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் டான்குபர் ராய் உயிரிழந்ததால் அந்த தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.
தேசிய மக்கள் கட்சி, பாஜக, திரிணாமுல், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடையே நான்கு முனை போட்டி நிலவுகிறது.
ஆட்சியை கைப்பற்ற 31 இடங்களில் வெற்றி பெற வேண்டும். 10 மணி நிலவரப்படி தேசிய மக்கள் கட்சி 20 இடங்களிலும், பாஜக 10 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 6 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 8 இடங்களிலும், மற்ற கட்சிகள் 10 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
மேகாலயாவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டப்பேரவை அமையலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
செல்வம்
விலை உயரும் தங்கம்: இன்றைய நிலவரம்!
திரிபுரா நாகாலாந்தில் பாஜக கூட்டணி முன்னிலை!