அதிகரிக்கும் கொரோனா: மோடி எச்சரிக்கை!

அரசியல்

பிரதமர் நரேந்திர மோடி மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம். அவர் இந்த நிகழ்ச்சிகளில் பல்வேறு விஷயங்களை பற்றி பேசி வருகிறார்.

இந்நிலையில், இந்த ஆண்டிற்கான கடைசி மான் கி பாத் நிகழ்ச்சியில் இன்று (டிசம்பர் 25 ) மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டோர் யோகா செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், அவர் பேசியதாவது,”முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், கல்வி, வெளியுறவுக் கொள்கை, உள்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றவர். 2022ஆம் ஆண்டு இந்தியாவுக்கு மிகவும் அற்புதமானது. உலக பொருளாதாரத்தில் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளோம். ஜி-20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது” என்றார்.

உலகின் பல நாடுகளில் கொரோனா அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம். நாம் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் முகக்கவசம் அணிய வேண்டும் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாக, சுகாதாரத் துறையில் பல்வேறு சவால்களை நாம் சமாளித்து வருகிறோம். பெரியம்மை மற்றும் போலியோ போன்ற நோய்களை இந்தியாவில் இருந்து ஒழித்து விட்டோம். இனி, காலா அசார் நோயும் நீங்கும். இந்த நோய் பீகார் மற்றும் ஜார்கண்டின் 4 மாவட்டங்களில் மட்டுமே உள்ளது.

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் யோகா செய்தால், நல்ல பலன் கிடைக்குமென ஆய்வில் தெரியவந்துள்ளது. நோயாளிகள் தொடர்ந்து யோகா செய்வதால் நோய் மீண்டும் வருவது 18% குறைக்கப்படுகிறது. மருத்துவ அறிவியலில் யோகாவும் ஆயுர்வேதமும் ஆதார அடிப்படையிலான ஆராய்ச்சி மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

அமெரிக்காவில் பனிப்புயல்: விமானங்கள் ரத்து!

வணிக நிறுவனங்களில் மாஸ்க் அவசியம்: மா.சுப்பிரமணியன்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *