“அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாக உள்ளது” – நாராயணன் திருப்பதி

அரசியல்

அதிமுக பாஜக கூட்டணி உறுதியாக உள்ளது என்று பாஜக துணை தலைவர் திருப்பதி நாராயணன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்ததற்கு அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்திருந்தனர்.

இதற்கு பதிலளித்த அண்ணாமலை, “1956 இல் நடந்த அந்த சம்பவம் தொடர்பாக தி இந்து ஆங்கில பத்திரிகையில் வெளிவந்த செய்திகள் என்னிடம் உள்ளன. நான் ஒரு விஷயம் சொன்னால் ஆதாரத்தோடுதான் சொல்லுவேன்.

என்னை விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும். நான் யாருடைய அடிமையும் கிடையாது. யாரும் எங்களுடைய அடிமையும் கிடையாது. மிரட்டல் உருட்டல் எல்லாம் என்னிடம் வேலைக்கு ஆகாது. எனக்கும் கடும் சொற்கள் வரும். சி.வி. சண்முகம் சாயந்தரம் ஆறு மணிக்கு மேல் ஒரு மாதிரி பேசுவார், ஆறு மணிக்கு முன்னர் வேறு மாதிரி பேசுவார்” என்று தெரிவித்திருந்திருந்தார்.

இந்தநிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “பெரியார், அண்ணா,எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றி பேச அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது. பலமுறை எச்சரிக்கை கொடுத்தோம். இனிமேல் அண்ணாமலையை அதிமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்வார்கள். அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. தேர்தல் சமயத்தில் கூட்டணி குறித்து முடிவெடுப்போம்” என்று தெரிவித்திருந்தார்.

ஜெயக்குமாரின் கருத்துக்கு எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ள பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, “அதிமுக பாஜக கூட்டணி உறுதியாக உள்ளது. கூட்டணி குறித்த எனது கருத்தை சில செய்தி தொலைக்காட்சிகள் வேறு அர்த்தத்தோடு பதிவிட்டதற்காக வருந்துகிறேன். கூட்டணியும் அதன் செயல்பாடுகளும் கட்சியின் மூத்த தலைவர்களால் தீர்மானிக்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

காவிரி: மத்திய அமைச்சருடன் தமிழக எம்.பி-க்கள் நாளை சந்திப்பு!

நீண்ட இடைவெளிக்கு பிறகு குடும்ப கதையில் ஜெயம் ரவி

+1
0
+1
4
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *