வேளாண் பட்ஜெட்: அங்கக விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது!

Published On:

| By Selvam

அங்கக வேளாண்மையில் சிறப்பாக செயல்படும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகையுடன் நம்மாழ்வார் விருது வழங்கப்படும் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசுகையில்,

“அங்கக வேளாண்மையில் நம்மாழ்வார் ஆற்றிய பெரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அங்கக வேளாண்மையில் ஈடுபடுவதோடு அதனை ஊக்குவித்து பிற அங்கக விவசாயிகளுக்கு கைகொடுக்கும் வகையில் செயல்படும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும்.

இவ்விருதுடன் ஐந்து லட்சம் ரூபாய் பரிசுப்பணம், பாரட்டுப்பத்திரம் குடியரசு தினத்தன்று வழங்கப்பட உள்ளது” என்று தெரிவித்தார்.

செல்வம்

தக்காளிக்கு ரூ.19 கோடி, வெங்காயத்துக்கு ரூ.29 கோடி!

வேளாண் பட்ஜெட்: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel