மக்கள் மாற்றத்துக்காகக் கிளம்பி வர வேண்டும்: நாம் தமிழர் வேட்பாளர்!

Published On:

| By Kavi

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் ஈரோடு கிழக்கில் வாக்குப்பதிவு தொடங்கியதும், வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.

ஈரோடு கிழக்கில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நடந்த பிரச்சாரம் நேற்று முன் தினத்துடன் ஓய்வடைந்து, வாக்குப்பதிவுக்கான பணிகள் நடந்து வந்தன.

தொடர்ந்து இன்று காலை 6 மணி முதல் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

வெயிலுக்கு முன்னதாகவே வாக்களிக்க வேண்டும் என காலை முதலே மக்கள் வாக்குச்சாவடிக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

அதுபோன்று நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மேனகா நவநீதன் பெரியண்ணா வீதியிலுள்ள கலைமகள் பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்கள் அனைவரும் மாற்றத்துக்காகக் கிளம்பி வர வேண்டும். வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றால் அனைவரும் வாக்களிக்க வேண்டும். வெற்றி வாய்ப்புகள் நன்றாக இருக்கிறது. மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். தேர்தல் அதிகாரிகள், போலீசார் எல்லோரும் கண்டிப்புடன் இருக்கின்றனர். இது அப்படியே தொடர வேண்டும்” என்று கூறினார்.
மொத்தம் 53 இடங்களில் 238 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
பிரியா

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மானிய நிதி பெற விண்ணப்பிக்கலாம்!

க்ரைம் த்ரில்லரில் உதயநிதியின் “கண்ணை நம்பாதே”!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share