”கொள்கையின் இலக்கணம் நல்லகண்ணு ” – முதல்வர் நேரில் வாழ்த்து!

அரசியல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு இன்று (டிசம்பர் 26 ) 98-வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு இன்று தனது 98-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அரசியல் வாழ்வில் முதுபெரும் அனுபவம் கொண்ட நல்லகண்ணு தமிழகத்திற்கும் தமிழக வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர்.

தனக்கென எதையும் சேர்த்து வைக்காத எளிமையின் சிகரமாக திகழும் நல்லகண்ணு தனது 80 வது பிறந்தநாளின் போது கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வசூலித்து தனக்கு அளிக்கப்பட்ட ஒரு கோடி ரூபாயை திரும்பவும் கட்சிக்கே கொடுத்தார்.

இவரின் பெருமையை போற்றும் விதமாக தமிழக அரசு இவருக்கு அம்பேத்கர் விருது , தகை சால் தமிழர் விருது உள்ளிட்டவற்றை வழங்கி உள்ளது. கடந்த ஆண்டு இவருக்கு வழங்கப்பட்ட தகைசால் தமிழர் விருதின் போது ரூ. 10 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது. ஆனால் அந்த காசோலையுடன் சேர்த்து ரூ. 5000 கூடுதலாக தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு நல்லகண்ணு வழங்கினார்.

வாழ்த்து தெரிவித்த முதல்வர்:

இந்நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணுவின் பிறந்த நாளையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்திற்கு நேரில் சென்று நல்லகண்ணுவை சந்தித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு 98வது ஆண்டு பிறந்தநாள். அவரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்தும் நேரத்தில், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தகைசால் தமிழர் விருதினை சங்கரய்யாவுக்கும், நல்லகண்ணுவுக்கும் அடுத்தடுத்த ஆண்டுகளில் வழங்கி இருக்கிறோம்.

நம்முடைய வழிகாட்டி:

அந்த உணர்வோடு அரசின் சார்பில் வழங்கி இருந்தாலும், இன்று திமுக சார்பில் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு வாழ்த்தி வணங்க கடமைப்பட்டிருக்கிறேன்.

98 வயதிலும் என்றைக்கும் கொள்கையில் இருந்து நழுவிவிடாமல், கொள்கைக்கு இலக்கணமாக லட்சியத்திற்கு இலக்கணமாக அவர் ஆற்றி கொண்டிருக்கும் பணியை தொடர வேண்டும்.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால், பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கு நாம் எடுத்திருக்கும் முயற்சிக்கும் வழிகாட்டியாக நல்லகண்ணு விளங்கி கொண்டிருக்கிறார். அதேபோல் திமுக அரசுக்கும் வழிகாட்டிக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ஐஏஎஸ் அதிகாரி கார் விபத்து: லிப்ட் கொடுத்த எம்.எல்.ஏ

விமர்சித்த ரசிகர்: அஸ்வின் பதிலடி!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *