naidu stalin peoples voice

“அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள்” ஸ்டாலின், சந்திரபாபுவின் கருத்துக்கு மக்களின் பதில்!

அரசியல்

நாடாளுமன்ற தொகுதிகள் குறைய வாய்ப்புள்ள நிலையில் மக்கள் அதிக அளவில் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் சொன்னதை பற்றி மக்கள் என்ன சொன்னார்கள் என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கொரோனாவால் 2021 ஆண்டு நடக்கவில்லை. இந்த கணக்கெடுப்பு இந்த வருடம் இறுதியில் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதற்காக இந்த ஆண்டு மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டிலும் ரூ.1309.46 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகு, மக்களவை தொகுதிகள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை, எல்லைகள் மற்றும் எஸ்.சி., எஸ்.டிகளுக்கான தனித் தொகுதிகளின் எண்ணிக்கை, மக்கள் தொகைக்கு ஏற்ப மாற்றப்படும். இதற்காக எல்லை நிர்ணய ஆணையம் சட்டப்படி அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 1970களில் இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்ட குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைத் தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, போன்ற மாநிலங்கள் சிறப்பாகச் செயல்படுத்தியதால், வட மாநிலங்களை விடத் தென் மாநிலங்களில் பிறப்பு விகிதம் தற்போது குறைவாக உள்ளது.

இதனால் 2026க்கு பிறகு நடக்கவிருக்கும் மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை மாற்றத்தின் போது, தென் மாநிலங்களில் மக்களவை தொகுதிகள் குறைவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக மக்களவையில் தென் மாநிலங்களை விட வட மாநிலங்களான உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார் போன்ற மாநிலங்களில் எம்.பி.-கள் கூடுவதற்கான வாய்ப்பு உள்ளது.

இது தொடர்பாக நேற்று சென்னை திருவான்மியூரில் 31 ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைத்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

அதில் “ நாடாளுமன்றத் தொகுதிகளெல்லாம் குறைகிறது என்ற நிலை வரும்போது ஏன் அளவோடு பெற்று வாழ வேண்டும் என்ற கேள்வி வருகிறது. நாமும் 16 குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாமே என்று சொல்லும் நிலைமையும் வந்துள்ளது” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

இதற்கிடையில் அக்டோபர் 19ஆம் தேதி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசுகையில் “நம் மாநிலத்தின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க வேண்டும். இரண்டிற்கு அதிகமான குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் நபர்கள் மட்டும் தான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற சட்டத்தை ஆந்திர அரசு கொண்டுவரவதைப் பற்றி யோசித்து வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.

இவர்களின் கருத்து குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய நாம் களத்துக்குச் சென்றோம்.

இனியன்

இப்போதைக்கு இது சரி என்று தோன்றலாம், ஆனால் முப்பது நாற்பது வருடங்கள் கழித்து மக்களுக்கு தேவையான வளங்கள் நம் நாட்டில் இருக்குமா என்பது சந்தேகம்தான்”

ரமேஷ்

என்னைப் பொறுத்தவரை நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்வது நல்ல முடிவுதான். இந்த முடிவு நாட்டுக்கு உதவியாக இருக்கும் குடும்பங்களுக்கும் உதவியாக இருக்கும்.

யோகேஷ் சக்திவேல்

முதல்வர் என்கிற முறையில் ஸ்டாலின் இதைத் தீர்வாகக் கூறியுள்ளார். ஆனால் நம் மாநிலத்தின் தனி நபர் வருமானம்  குறைவாக உள்ளது. நிறையக் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டால், அதற்கேற்றவாறு அரசாங்கம்  உள்கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். அது இல்லாத பட்சத்தில் இந்த தீர்வை நடைமுறைப்படுத்துவது கடினம்.

அனுஷியா

ஏற்கனவே சென்னையில் மக்கள் தொகை அதிகமாக உள்ளது. இதனால் இந்த முடிவு சரி இல்லை.

கிருஷ்ணா

ஏற்கனவே மக்கள் தொகை அடிப்படையில் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது. இந்த நிலைமையில் மக்களவை எம்.பி-களை அதிகரிக்க இது சரியான தீர்வாக இருக்காது. சட்ட ரீதியாக இதற்குத் தீர்வு காண முயலலாம்.

அழகிரி

எம்.பி. க்களை அதிகரிக்க இது சரியான தீர்வு என்று எனக்குத் தோன்றவில்லை. சட்ட ரீதியாகத் தான் இதற்குத் தீர்வு காணவேண்டும். வட மாநிலங்களின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் தொகை கட்டுக்குள் இருந்தால் தான், மக்களுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும்.

முத்துசெல்வம்

தற்போதுள்ள மக்கள் தொகைக்குத் தேவையான எம்.பி-களையே நீங்கள் கொண்டுவரவில்லை. இந்த நிலைமையில் மக்கள் தொகையை எப்படி கொண்டுவருவீர்கள். ஏற்கனவே மக்கள் தொகை அதிகமாக உள்ளது.

தற்போதுள்ள தனி மனித வருமானம் குறைவாக உள்ளதால், இரு குழந்தையை வளர்க்கவே சிரமமாக உள்ளது.

எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது. நானும் எனது மனைவியும் வேலைக்கு செல்கிறோம். ஆனால் செலவுகளைச் சமாளிக்கச் சிரமமாக உள்ளது. இதனால் இரண்டாவது குழந்தை வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

விஸ்வநாத்

இந்த காலத்தில் வருமானம் குறைவாக உள்ளது. அதனால் அளவோடு பெற்று வளமுடன் வாழ்வது தான் நல்லது.  எம்.பி சீட்களை உயர்த்துவதற்காகப் பொதுமக்கள் பாதிக்கக்கூடாது.

சரண்

மக்கள் தொகையை உயர்த்துவது தப்பில்லை. ஆனால் அவர்களை வளர்ப்பது சிரமமாக உள்ளது. ஃபேமிலி கோர்ட்களில் அவ்வளவு வழக்குகள் உள்ளது.

பல குழந்தைகள் அனாதை ஆசிரமங்களில் உள்ளார்கள். தமிழ் நாட்டில் பல பேர் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளார்கள். அவர்கள் என்ன செய்வார்கள். இதற்கான ஒரே தீர்வு அரசியலமைப்பைத் திருத்துவதுதான்.

ஜெய் கணேஷ்

பெற்றோர்களால் குழந்தைகளைச் சரியாக வளர்க்க முடியுமானால், எத்தனை குழந்தைகளை வேண்டுமென்றாலும் பெற்றுக்கொள்ளலாம்.

முன்னால் பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்த குடும்ப கட்டுப்பாடு திட்டத்தினால்தான் தென் மாநிலங்களின் மக்கள் தொகை குறைந்தது.

பொருளாதார ரீதியாக மக்களுக்கு இது பிரச்சினை கொண்டு வராது. அரசங்கம் பல திட்டங்களை  நடைமுறைப்படுத்தியுள்ளது. பல பேர் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள். அதனால் இந்த தீர்வு சரிதான்.

ஜேம்ஸ்

தற்போது உள்ள பொருளாதார சூழலில் இந்த தீர்வு சரி இல்லை.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

போலீசார் முன்பு பம்மிய ஜோடி : நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு!

90 களில் நாட்டை உலுக்கிய நாவுக்கரசு கொலை வழக்கு… கொலையாளி ஜான் டேவிட்டுக்கு ஜாமீன்!

டானா புயல் : காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *