திரிபுரா நாகாலாந்தில் பாஜக கூட்டணி முன்னிலை!

அரசியல் இந்தியா

தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில் பாஜக கூட்டணியும், மேகாலயா மாநிலத்தில் தேசிய மக்கள் கட்சியும் முன்னிலை வகிக்கிறது.

இன்று (மார்ச் 2) காலை 8 மணிக்கு திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவங்கியது.

திரிபுரா மாநிலத்தில் பாஜக கூட்டணி 38 தொகுதிகளிலும், இடதுசாரி – காங்கிரஸ் கூட்டணி 15 தொகுதிகளிலும், திப்ரா மோதா 6 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

மேகாலயா மாநிலத்தில் தேசிய மக்கள் கட்சி 22 தொகுதிகளிலும், பாஜக 10 தொகுதிகளிலும், திரிணாமுல் காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.

நாகாலாந்து மாநிலத்தில் ஜனநாயக முற்போக்கு கட்சி, பாஜக கூட்டணி 49 தொகுதிகளிலும், நாகா மக்கள் முன்னணி 6 தொகுதிகளிலும், காங்கிரஸ் 1 தொகுதியிலும் முன்னணி வகிக்கிறது.

செல்வம்

ரஷ்யாவுடனான உறவு; இந்தியாவின் முடிவை மதிக்கிறோம்: இங்கிலாந்து!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *