நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய மூன்று மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மார்ச் 2 )காலை 8 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பல தொகுதிகளில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், கட்சிகளின் முன்னிலை நிலவரமும் வெளியாகி வருகின்றன.
நண்பகல் 3.20 மணி நிலவரப்படி, 60 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்து மாநிலத்தில் ஆளும் NDPP- பாஜக கூட்டணி 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது மேலும் 17 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
இதன் மூலம் நாகாலாந்தில் மீண்டும் முதலமைச்சர் நைபியு ரியோ தலைமையில் மீண்டும் NDPP- பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோல்,60 தொகுதிகள் கொண்ட திரிபுராவில் ஆளும் பாஜக கூட்டணி 11 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது மேலும், 23 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதன்மூலம் திரிபுராவிலும் பாஜக தனது ஆட்சியை தக்க வைக்கிறது.
இடதுசாரி- காங்கிரஸ் கட்சி 8 இடங்களை கைப்பற்றியுள்ளது 6 இடங்களில் முன்னிலையில் உள்ளது. திப்ரா மோதா கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
3வது டெஸ்ட்: 2வது இன்னிங்ஸிலும் ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா
ஆட்டம் போட்ட முன்னாள் வீராங்கனை மிதாலி ராஜ்: வைரல் வீடியோ!